சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

x

சென்னையில் வரும் 27ம் தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்