சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப்பணிகள் - மத்திய அரசின் நிதி வராததால் கிடப்பில் போடப்படும் சூழல்

x

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்திற்கு 480 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, சர்வதேச வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகை மற்றும் தமிழ்நாடு அரசு அளித்த தொகையுடன் தற்போதைக்கு பணிகள் நடந்து வருகின்றன. மெட்ரோ இரண்டாவது கட்டத் திட்டத்துக்கான அனுமதி மற்றும் நிதி குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை அனுப்பியும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்படும் சூழல் உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்