மட்டன் குழம்பு கேட்டு ரகளை செய்த காவலர்கள்... வாடிக்கையாளரை தாக்கி அராஜகம்... வெளியான சிசிடிவி காட்சி

x
  • சென்னை திருவொற்றியூரில், உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
  • திருவொற்றியூர் தேரடி பகுதியில் இயங்கி வரும் அசைவ உணவகத்தில், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்கள், உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.
  • காவலர்கள் மட்டன் குழம்பு கேட்க, அங்கு பணிபுரியும் ஊழியர் தீர்ந்துவிட்டதாக கூறியுள்ளார்.
  • அப்போது, கடை ஊழியரை மிரட்டியதுடன், 5 காவலர்கள் அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
  • மேலும், வாடிக்கையாளர் ஒருவரையும் காவலர்கள் தாக்கியுள்ளனர்.
  • இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து, திருவெற்றியூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
  • அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், ரகளையில் ஈடுபட்ட முதல் நிலைக் காவலர்கள் தனசேகர் மற்றும் கோட்டமுத்து ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்