இந்த பிசினஸில் டபுல் லாபம்.. டாக்குமெண்ட் கொடுத்ததும் வந்த செக்.. நம்பி நடுதெருவில் நிற்கும் மக்கள்

x

வீட்டு பத்திரங்களை வைத்து 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ரத்தினசாமி உட்பட பாதிக்கப்பட்டவர்கள், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், சகோதரர்களான சிவகுமார், விஜயகுமார் ஆகிய இருவர், வீட்டு பத்திரங்களை கொடுத்து முதலீடு செய்தால், வியாபாரத்தில் இரட்டிப்பு பணம் அளிப்பதாக கூறினர். அதனை நம்பி, பலர் ஆவணங்களை அளித்த நிலையில், ஒரு மாதம் கழித்து காசோலை வழங்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் வங்கியில் இருந்து பணமில்லாமல் திரும்ப அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே, தங்களது ஆவணங்களை வங்கியில் அடகு வைத்து சகோதரர்கள் இருவரும் கடன் வாங்கி இருப்பதும், பணத்தை கட்டவில்லை என வங்கியில் இருந்து ஜப்தி செய்வதற்கான அறிவிப்பு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது வீடுகளையும், பத்திரங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்