மாட்டுக்கு ரூ.5000 அபராதம்... ஊழியருக்கு சரமாரியாக விழுந்த அடி - சென்னையில் பரபரப்பு சம்பவம்

x

சென்னை வளசரவாக்கத்தில் பணியாற்றி வரும் மாநகராட்சி ஊழியர் கன்னியப்பன், சக ஊழியர்களுடன் நெற்குன்றம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சென்றுள்ளார். அப்போது, ஊழியர்களை வழிமறித்த இளைஞர் ஒருவர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கன்னியப்பனின் செல்போனை பிடுங்கி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் ஊழியர்கள் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் இளைஞரின் மாட்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த ஆத்திரத்தில், அவர் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்