தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி - சென்னையில் அதிர்ச்சி

x

தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி - சென்னையில் அதிர்ச்சி

சென்னை நங்கநல்லூரில் 4 கிராம் தங்கம் தருவதாக கூறி, பொதுமக்களிடம் மாதந்தோறும் 1700 ரூபாய் வரை தீபாவளி சீட்டு வசூலித்து வந்தவர் இரவோடு இரவாக வீட்டை காலி செய்து விட்டதால் ஏமாந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஒன்று திரண்டு வந்து தாங்கள் தீபாவளி சீட்டு கட்டி ஏமாந்தது குறித்து புகார் அளித்தனர்.

சென்னை நங்கநல்லூர் பகுதியில் சேர்ந்த ராஜேஸ்வரி இவர் அந்த பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி சீட்டு வசூலித்து திருப்பி கொடுத்து வந்துள்ளார். ஆனால் இம்முறை பொதுமக்களிடம் தீபாவளி சீட்டு பிரித்த அவர், 25 ஆம் தேதி திருப்பி தருவதாக அறிவித்துவிட்டு, முந்தினமே இரவோடு இரவாக குடும்பத்தோடு லட்சக்கணக்கான பணத்தை சுருக்கி கொண்டு வீட்டை காலி செய்துள்ளார். ஏமாந்த பொதுமக்கள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் இது குறித்து புகார் அளித்ததோடு, பணத்தை மீட்டு தர வேண்டுமென கதறி அழுதனர்


Next Story

மேலும் செய்திகள்