சென்னை சென்ட்ரலில் திடீர் பரபரப்பு - மிரண்டு நின்ற போலீசார்
முதியவர் சட்டைக்குள் மறைத்து கொண்டு வந்த கட்டுகட்டாக பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த ஆந்திர முதியவரை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் சட்டைக்குள் பல பைகளை தைத்து அதனுள் கட்டுக்காட்டாக ரூபாய் 13 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 103 கிராம் தங்கம் கொண்டு வந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மகனின் திருமணத்திற்கு நகை வாங்க வந்ததாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
