சென்னையில் நொடியில் மண்ணில் புதைந்த வடமாநில தொழிலாளர் - நேரில் பார்த்தவர் சொன்ன பகீர்

x

சென்னை அமைந்தகரை, அய்யாவு காலனி பால விநாயகர் தெருவில் 2 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அங்கு

தொழிலாளர்கள் இன்று வேலை பார்த்து கொண்டிருந்த போது, இரண்டாவது மாடி தடுப்பு

சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நவ்ஷத் ஷேக் மற்றும் குஷ்முதீன் என்ற 2 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

அவர்களை சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்ட நிலையில் நவ்ஷத் ஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த குஷ்முதினை போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி கட்டட உரிமையாளர் செல்வகுமார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாரம் அமைக்க தடுப்புச் சுவற்றில் துளையிட்ட போது சுவர் அடியோடு பெயர்ந்து விழுந்தாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்