சென்னை ஏர்போர்ட்டில் ரூ.200 கோடி...குருவியை கையில் எடுத்த ED - எந்த கட்சிக்கு பணம் கொடுக்க திட்டம்?

x

நாடாளுமன்ற தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக, துபாயில் இருந்து 200 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்தி வர முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.மலேசியாவில் இருந்து சென்னைக்கு ஹவாலா பணம் கடத்தி வர இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைததது. அதன்பேரில், கடந்த ஏழாம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த வினோத் குமார் என்பவரை அதிகாரிகள் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மிகப்பெரிய ஹவாலா கும்பலுடன் வினோத்துக்கு தொடர்பு இருப்பதும் துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவரும் தரகராக செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும் அவருடைய செல்போன், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அவர் துபாயில் வசிக்கும் செல்வம் என்பவர் மூலமாக தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு வழங்குவதற்காக ரூபாய் 200 கோடி பணத்தை விமானம் மூலம் கொண்டு வர திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட வினோத்திடம், எந்த கட்சிக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்றார் எனவும், அவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்