மீண்டும் கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் சிறைபிடிப்பு.. இதுதான் காரணமா?

x

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவில் பேருந்துகள் இல்லையென நேற்றிரவு பயணிகள் போராட்டம் செய்த நிலையில் இன்று கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இன்று கூடுதலாக 520- TNSTC பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி நேற்று இரவு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னை மாநகரப் பேருந்துகள் மூலமாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் நாளை ஞாயிறு விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் இன்று மாலையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

மாலை 5 மணி முதல் 7 மணி வரை போதிய பேருந்துகள் இல்லாமல் தவித்து வந்தனர். இதனை அடுத்து ஏழு மணிக்கு பிறகு ஏராளமான அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தன. அதன் மூலம் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் ஊர்களுக்கு சென்றனர். குறிப்பாக, விழுப்புரம் கோட்டத்தில் கிராமப்புறங்களில் இயங்கக்கூடிய அரசு பேருந்துகளை திண்டிவனம், திருவண்ணாமலை, போளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பேருந்து என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கு டிக்கெட் வாங்கப்படுகிறது. இதனால் பெரும் குழப்பம் பெண்களிடையே ஏற்பட்டது.

இன்றைய தினம் வழக்கமாக விழுப்புரம் கோட்டத்தில் 650-பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 300-பேருந்துகள் என 950-பேருந்துகளும், சேலம் கோட்டத்தில் வழக்கமாக 66 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 20 பேருந்துகள் என 86-பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்தில் வழக்கமாக 176 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 200 பேருந்துகள் என மொத்தம் 376 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்