நிலவுக்கு சென்ற சந்திரயான்-3 இப்போது செங்கல்பட்டில்..

x

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில், சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டு, தத்ரூபமாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளியில், சந்திரயான்- 3 குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. சந்திரயான் 3 மற்றும் ரோவர் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன. 10 நாட்களுக்கும் மேலாக பள்ளி மாணவர்கள் இணைந்து இந்த மாதிரி சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கினர்.

ரோவர் பிரிந்து வெளியேறியபோது பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்