"சாம்பியன்..சாம்பியன்..!!" கட்டிப்பிடித்து துள்ளி குதித்த ராணுவ வீரர்கள்

சென்னை ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் 2021-2022 ஆண்டிற்கான ராணுவ பயிற்சி பெற்று முடித்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பு சென்னை ஓ.டி.ஏ.,வில்...
x

"சாம்பியன்..சாம்பியன்..!!" கட்டிப்பிடித்து துள்ளி குதித்த ராணுவ வீரர்கள்

  • சென்னை ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் 2021-2022 ஆண்டிற்கான ராணுவ பயிற்சி பெற்று முடித்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பு சென்னை ஓ.டி.ஏ.,வில் உள்ள பரமேஸ்வரன் ராணுவ சதுக்கத்தில் நடைபெற்றது.
  • இந்த அணிவகுப்பில் மொத்தம் 166 இந்திய வீரகள், நட்பு நாடுகளை சேர்ந்த 30 வீரர்கள் பங்கேற்று பயிற்சியை முடித்துள்ளனர். ஓ.டி.ஏ.,வில் நடைபெற்ற ராணுவ அணி வகுப்பில் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லா ஷமால் கலந்துகொண்டு அணிவகுப்பை மரியாதையைப் பெற்றுக் கொண்டார்.
  • பின்னர் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கினார். அணிவகுப்பு நிறைவு பெற்ற உடன் பயிற்சி முடிந்த வீரர்கள், அவர்களது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்