மத்திய அரசின் அறிவிப்பு - சென்னையில் இன்று முதல் விலைகுறைப்பு

x

சிலிண்டர் விலை ரூ.200-400 விலை குறைப்பு

சென்னையில் அமலுக்கு வந்த விலைகுறைப்பு நடவடிக்கை

ரூ.1118-ஆக இருந்த சிலிண்டர் விலை

சாதாரண பயனாளிகளுக்கு ரூ.918க்கு விற்பனை

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு ரூ.718க்கு விற்பனை

மத்திய அரசின் அறிவிப்பின்படி, 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 முதல் 400 ரூபாய் வரையிலான விலை குறைப்பு நடவடிக்கை இன்று காலை முதல் சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது...

ஆயிரத்து 118 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை சாதாரண பயனாளிகளுக்கு 200 ரூபாய் குறைப்பால் 918 ரூபாய்க்கு விற்கப்படுகிறது... அதேபோல், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு 718 ரூபாயாக விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது... உஜ்வாலா திட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 200 ரூபாய் மானியமாக அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். அவர்களும் 918 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும் என சமையல் எரிவாயு ஏஜென்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்