செல்போனால் நடந்த விபரீதம் - 6 வயது குழந்தை உட்பட ஒரு குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம்
செல்போனால் நடந்த விபரீதம் - 6 வயது குழந்தை உட்பட ஒரு குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம்
ஓமலூரை அடுத்த தின்னப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார், திருச்சியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பணத்தை இழந்த சதீஷ்குமார், ஒரு கட்டத்தில் லோன் ஆப் மூலம் கடன் பெற்று, விளையாடியதாகத்
தெரிகிறது. லோன் கொடுத்த நிறுவனங்கள், கடன் தொகைக்கு மிகுதியாக பல மடங்கு பணம் செலுத்திய பிறகும் போனில் அழைத்து மிரட்டி பணம் பறித்ததாக
கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், தனது மனைவி, மகனுடன் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் தூக்க மாத்திரைகளை விழுங்கி
தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர்களை உறவினர்கள் தேடிவந்தபோது, மூவரும் விடுதியில் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மீட்டு ஓமலூரில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஓமலூர்
போலீசாரும், சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.