வீட்டில் Casual-ஆக நடக்கும் பாலியல் தொழில்...7 பேரை மடக்கி பிடித்த போலீசார்..சேலத்தில் அதிர்ச்சி
சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை நகரில் ஒரு தம்பதி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வருவதாக புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, திவ்யா - பாலமுரளி என்ற தம்பதியினர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருநங்கைகள் மற்றும் எச்ஐவி பாதிக்கப்பட்ட ஆண்களின் மனைவிகளை கவுன்சிலிங் கொடுக்கும் வேலையை பார்த்து வந்த திவ்யா, அவர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, திவ்யா, அவரது கணவர் பாலமுரளி, உடந்தையாக செயல்பட்ட தியாகராஜன், சாமிவேல், மோகன் குமார், கௌசல்யா, தேவா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story