கம்மி விலையில் கிடைக்கும் கார்.. OLXல் மாஃபியா மெகா மோசடி - போலீசாரை அதிர வைத்த சம்பவம்

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், கார் உள்ளிட்ட வாகனங்களைத் திருடி, ஆவணங்களை மாற்றி ஓ.எல்.எக்ஸ் இணையதளம் மூலம் விற்பனை செய்த 6 பேரை கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர், கார் விற்பனை குறித்து ஓ.எல்.எக்ஸ் இணையதள விளம்பரத்தை பார்த்து,

மதுரை கொடிக்குளத்தை சேர்ந்த அன்புச்செல்வனிடம் இருந்து 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு கார் வாங்க முடிவு செய்தார். இதற்காக ஆண்டிபட்டி சென்று, அவரது நண்பர்களிடம் பணம் கொடுத்து காரை வாங்கியுள்ளார். பின்னர் அந்த காரை 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு, தஞ்சையை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு விற்றுள்ளார். இந்நிலையில், காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி மூலம் தஞ்சை சென்ற கேரள போலீசார், விக்னேஷ் வாங்கியது திருடப்பட்ட கார் எனக்கூறி, அதனை எடுத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், மதன்ராஜை அணுகி தனது பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அன்புச்செல்வனை தொடர்பு கொள்ள முடியாததால், ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் மதன்ராஜ் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியாக கார் விற்பனை செய்த அன்புச்செல்வன் மற்றும் அவருக்கு உதவிய முருகன், ஆனந்தன், மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்