திடீரென கவிழ்ந்த பஸ்.. துடித்து பலியான மாணவர்கள் - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

x

விருதுநகரில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வ.புதுப்பட்டி அருகே மாதவாராயன் குளம் பக்கத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் நந்தகுமார், பாண்டி ஆகிய 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்... மேலும் காயம் அடைந்த மாணவர்கள், பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.. இந்நிலையில், இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்