பாஜக கொடிக்கு தீ வைப்பு - தென்காசியில் பரபரப்பு

x

பாஜக கொடிக்கு தீ வைப்பு - தென்காசியில் பரபரப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்லப்பிள்ளையார் குளம் பேருந்து

நிலையம் அருகே அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மர்ம நபர்கள், பாஜக கொடி

கம்பத்தில் இருந்து, கொடியை கீழே இறக்கி தீ வைத்து விட்டு, தப்பி சென்றுள்ளனர். ஏற்கனவே, இதே கிராமத்தில், இவருர் மது போதையில் பாஜகவின்

கொடி கம்பத்தை சேதப்படுத்திய நிலையில், தற்போது கொடிக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார்

மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்