கூடலூரில் இடிந்து விழுந்த பாலம்..இரவு முழுவதும் தொடர்ந்து நடந்த பணி..20 மணி நேரத்திற்குப்பின் வீடு திரும்பிய மக்கள்!

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில், பாலம் இடிந்து விழுந்த நிலையில், இரவு முழுவதும் போர்க்கால அடிப்படையில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

கூடலூர் - உதகை சாலையில், மேல்கூடலூர் பகுதியில் மிகவும் சேதமடைந்த பழைய பாலம் அருகே, புதிய பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்தப் பாலம் இடிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி இரவு முழுவதும் துரித கதியில் நடைபெற்றது. 20 மணி நேரத்திற்குப் பின் அப்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லத் தொடங்கின. மேலும், வார விடுமுறை காரணமாக கேரளா, கர்நாடகாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துள்ள நிலையில், இப்பாலத்தின் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலம் உடைந்ததால், இரவு முழுவதும் சாலையில் சிக்கிய சுற்றுலா பயணிகள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்