#BREAKING | வனத்துறை செயலர் சுப்ரியா சாகு நீதிமன்றத்தில் ஆஜர்

x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை நேரில் வரவழைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல- நீதிபதி கருத்து.

பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்- நீதிபதி.

கல்வித்துறைக்கு அடுத்தப்படியாக வனத்துறையில் தான் அதிகபடியான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கலாகின்றன- நீதிபதி கருத்து

திருச்சியை சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றினார்.

இந்த நிலையில் அவருக்கு பணி உயர்வு வழங்கக்கோரி கடந்த 2014ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

சம்மந்தப்பட்ட மனுதாரரின் மனுவை பரிசீலித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 2017ம் ஆண்டு கருப்பையா தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நீண்ட காலமாக விசாரணையில் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி நிதிமன்ற உத்தரவை பல ஆண்டுகளாக நிறைவேற்றாதது குறித்து விளக்கமளிக்க வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதனைடிப்படையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த்,

கல்வித்துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுகின்றன.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல.

கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம்.

4 ஆண்டுகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு ஏன் தாமதமாகிறது?

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றினாலே அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என தெரிவித்தார்

இதனை தொடர்ந்து

இந்த வழக்கில் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டதாக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்