கோவில் பூட்டை உடைத்து திருட்டு. கூட்டு சேர்ந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் - சிசிடிவி காட்சிகள்

x

கோவை மாவட்டம், சூலூர் அருகே கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், தங்கத் தாலி, 5 கிலோ வெள்ளி கிரீடம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சுங்கத் துறை கிராமத்தில், கோயிலுக்கு அருகில் உள்ள சுப்பாத்தாள் என்பவரின் வீட்டில் பணம், நகை திருடு போனது குறித்து, கோயில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கோயிலில் இருந்த தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் திருடுபோனது போலீசாருக்குத் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்