ஆண் நண்பருடன் ஏற்பட்ட சண்டையில் பெண் தற்கொலை

ஆண் நண்பருடன் ஏற்பட்ட சண்டையில் பெண் தற்கொலை
Published on

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் மலர்விழி, ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், ரேஷன் கடையில் அரிசி எடுக்க வரும் மணி என்பவருடன் மலர்விழிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மலர்விழி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக, மணியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com