நடுரோட்டில் பறந்த பள்ளி மாணவி.. இரக்கமின்றி மோதிய மாணவர்கள் - உறைய வைக்கும் அதிர்ச்சி காட்சி

x

நாட்றம்பள்ளி அருகே பள்ளி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதியதில், பள்ளி மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில், ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பள்ளி மாணவர்கள் பயணித்துள்ளனர். அப்போது அவர்களது வாகனம், பள்ளி மாணவி மீது மோதியுள்ளது. இதில் நெற்றியில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவிக்கு, அரசு மருத்துவமனையில் 5 தையல்கள் போடப்பட்டது. தகவலறிந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே இருசக்கர வாகனம் பள்ளி மாணவி மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்