கேரளாவை அலற விடும் காய்ச்சல்... எல்லையில் உஷாரான தமிழகம்

x

நீலகிரி மாவட்டம் நாடு காணி, பாட்டவயல், நம்பியார் குன்னு, சோலாடி, கக்குண்டி, தாளூர், பூத குன்று மற்றும் கர்நாடக எல்லையான கக்கநல்லா போன்ற சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவ குழு களம் இறங்கி உள்ளது.கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன...

குமரி களியக்காவிளை பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு வாகனங்களின் சக்கரங்களில் பூச்சி மருந்து தெளித்து அனுமதித்து வருகின்றனர்.

தேனி போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முதல் சோதனை சாவடியில் கால்நடை சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்