நேருக்கு நேர் மோதிய பைக்குகள்..சாலையில் சரிந்த 3 இளைஞர்கள் - உடனடியாக அமைச்சர் செய்த செயல்

x

திருப்பூர் மாவட ்டம் காங்கேயம் அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து உதவிய அமைச்சர் சாமி நாதனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காங்கேயம் ஹாஸ்டல் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று நள்ளிரவு 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு 3 பேர் காயமடைந்தனர்.. அரசு விழாவில் பங்கேற்று விட்டு அவ்வழியே சென்ற அமைச்சர் சாமிநாதன் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு காவலர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.. காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தரப்பட்டதும் அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வரும் நிலையில் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்