வீட்டின் முன்பு இருந்த பைக்கை லாவகமாக திருடிய கூட்டு களவாணிகள் அதிரவைக்கும் CCTV காட்சி

x

பொன்னேரியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அங்கமுத்து தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணாததால் அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தார். அதில், இரண்டு இளைஞர்கள் வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தற்போது, மர்ம நபர்கள் வாகனத்தை திருடி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்