பைக் திருட்டு;பெட்ரோலுக்காக வீடு புகுந்து கொள்ளை! அலப்பறை காட்டிய திருடன் -போலீசார் வைத்த ட்விஸ்ட்

x

ஆசையாக வாங்கிய பைக்கிற்கு, இளைஞர் முறையாக பைனான்ஸ் கட்டாததால், பைனான்ஸ் ஊழியர்கள் பைக்கை பறிமுதல் செய்த நிலையில், இளைஞர் பைக் திருட்டில் இறங்கிய சம்பவம் நெல்லையில் அரங்கேறியிருக்கிறது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள தனக்கர் குளத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் பைனான்ஸ் மூலம் தவணை முறையில் பைக் ஒன்றை வாங்கிய நிலையில், அதற்கு முறையாக தவணை கட்டாததால் பைனான்ஸ் ஊழியர்கள் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால், வருத்தத்தில் இருந்த பேச்சிமுத்து, ஊரார் முன்னிலையில் அவமானம் ஏற்பட்டு விட்டதாக கூறி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊராரின் மத்தியில் கெத்தாக பைக்கில் வலம் வர விரும்பிய பேச்சிமுத்து, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பைக் திருட்டில் இறங்கியிருக்கிறார். திருடிய பைக்குகளை நம்பர் பிளேட் மாற்றாமலேயே பயன்படுத்திய பேச்சிமுத்து, தினம் தினம் ஒவ்வொரு பைக்கில் வலம் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், திருடிய பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்ப பணமில்லாமல், பல வீடுகளிலும் பேச்சிமுத்து திருட ஆரம்பித்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பேச்சிமுத்துவை கைது செய்த கன்னியாகுமரி போலீசார், அவரிடம் இருந்து திருட்டு பைக்குகள் மற்றும் குத்துவிளக்குகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்