பாரதிதாசனுக்கு மணிமண்டபம்... பேரன் இளமுருகன் கோரிக்கை

x

சென்னையில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் மற்றும் நினைவு நூலகமும் அமைக்க கோரி முதலமைச்சரிடம் மனு அளித்து இருப்பதாக அவரது பேரன் இளமுருகன் தெரிவித்துள்ளார். பாரதிதாசனின் 134 வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பாரதிதாசனின் மகள் வழிப்பேரன், இளமுருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழுக்கு தொண்டாற்றிய பாரதிதாசனின் புகழை, அனைவரும் அறியும் வகையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்