"பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது"மகனின் இறுதி ஊர்வலத்தில்நடுரோட்டில் கதறி அழுத தாய் | Chennai

x

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சன் டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தார்... சிறுவன் டெங்குக் காய்ச்சலால் உயிரிழக்கக் காரணம் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் எனக்கூறி உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டு, சிறுவனின் உடல் நொளம்பூரில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது... அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறுவனிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தின் போது சிறுவனின் தாய் மகனின் சடலத்தைக் கண்டு சாலையில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கதறியழுதது காண்போரைக் கண் கலங்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்