பார்-ஆக மாறிய பேருந்து நிறுத்தம் - ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்!

x

சென்னை திருவல்லிக்கேணி பேருந்து நிறுத்தத்தை மது அருந்தும் இடமாக பயன்படுத்தியவர்கள் மீது, புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து நிறுத்தத்தை, சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால், அவ்வழியாக செல்லும் மக்கள் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் வீடியோ பகிரப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த போலீசார், ஒரு மணி நேரத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றதுடன், மது அருந்தியவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும், பேருந்து நிறுத்தத்தில் இருந்த மதுப்பாட்டில்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சுத்தம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்