தடை செய்யப்பட்ட வெள்ளை இறால் வளர்ப்பு... தட்டி கேட்ட நபரின் கைவிரலை துண்டித்த உரிமையாளர்
தடை செய்யப்பட்ட வெள்ளை இறால் வளர்ப்பு... தட்டி கேட்ட நபரின் கைவிரலை துண்டித்த உரிமையாளர் - சிதம்பரத்தில் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம் சின்னாண்டி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரகத் அலி. இவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்த ரவிச்சந்திரன் என்பவர், தடை செய்யப்பட்ட வெள்ளை இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், இறால் குட்டையில் இருந்து வெளியேறிய கழிவு நீரால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கழிவு நீரை குடித்து 12 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிலத்தின் உரிமையாளரும், கிராம மக்களும் இறால் குட்டையை காலி செய்யுமாறு ரவிச்சந்திரனிடம் கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ரவிச்சந்திரன் கத்தியால் நூர் முகமது என்பவரின் கைவிரலை வெட்டி துண்டித்துள்ளார். நூர் முகமது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.