செய்யவே கூடாத பகீர் காரியம்..போலீஸ் கையில் கையும் களவுமாக சிக்கிய பிரபல ஹீரோவின் காதலி

x

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் போதைப் பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஹைதராபாத் நரசிங்கி பகுதியில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு இளம் பெண்ணிடம் இருந்து, எம்.டி.எம்.ஏ எனப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர், என்.டி.பி.எல் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். அந்த இளம்பெண்ணிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், போதைப்பொருளை கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், குறும்படங்கள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்ற இளம் ஹீரோ ராஜ் தரூனின் காதலி லாவன்யா என்றும் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்