சென்னை போரூரில் பகீர்.. இப்படியும் சம்பவங்கள் நடக்குமா?

x

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த விஜயகோபாலன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். வெளிநாட்டில் தான் இருந்த போது, எஸ்.டி.எஸ்.கே. நிறுவனத்திடம், தனது வீட்டின் முழு பொறுப்பையும் ஒப்படைத்த‌தாக கூறியுள்ளார். 2 மாத‌ம் வாடகையை சரியாக அளித்து வந்த‌தாகவும், அதன்பிறகு வாடகை செலுத்தாத‌தால், சென்னை வந்து விசாரித்த போது, வீட்டை வேறு நபர்களுக்கு லீசுக்கு கொடுத்திருப்பது தெரிய வந்த‌தாகவும் கூறினார். 25 லட்சம் ரூபாய்க்கு வீட்டை லீசுக்கு விட்டதும், பல்வேறு நபர்களிடம் 15 லட்சம், 10 லட்சம் என வீடுகளை லீசுக்கு விட்டுவிட்டு தப்பியோடியதும் தெரிய வந்த‌தாக கூறிய விஜயகோபாலன், ஏற்கனவே ஏப்ரல் மாதம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார். எஸ்.டி.எஸ்.கே. நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு மனு அளித்த‌தாக தெரிவித்தார். ஏற்கனவே, நடிகர்கள் நாகேந்திர பிரசாத் மற்றும் டேனி உள்ளிட்டோரும் ஏமாற்றப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்