பயிற்சிக்கு வந்த மாணவியிடம் அத்துமீறிய ஆடிட்டர்

x

ஈரோட்டில், தனியார் தணிக்கை பயிற்சி மையத்தில், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயிற்சியாளர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு காந்திஜி சாலை ஜவான் பவான் அலுவலகம் எதிரே உள்ள கட்டடத்தில் ஆடிட்டர் சத்தியமூர்த்தி என்பவர், ஆடிட்டிங் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி வகுப்பியில் பயிலும் மாணவிகள் இருவரிடம் சத்தியமூர்த்தி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவியின் உறவினருக்கு தெரியவர, ஆத்திரமடைந்த அவர்கள் சத்தியமூர்த்தியை அடித்து உதைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், சத்தியமூர்த்தி மீது மிரட்டல் விடுப்பது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, பெண்களுக்கு எதிரான கொடுமை செய்வது என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்