அட்றா சக்க.. அடுத்த 7 நாட்களுக்கு... உஷார் மக்களே

x

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்