புளியம்பட்டியிலும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்... தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ...

x

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோப்பையை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்