10 வருடமாய் ஏமாற்றிய ஆசாமி..கேட்டால் கொலை மிரட்டல் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்

x

மயிலாடுதுறையில் ரூபாய் 50 லட்சம் பணம் வாங்கிவிட்டு, திருப்பிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், நீடூர் நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர்கள் அப்சர் ரஹ்மான் மற்றும் அவரது சகோதரி மகன் முகமது பாரூக். இவர்களிடம் தனது ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யுமாறு கூறி, நீடுரைச் சேர்ந்த பாலாஜி பாபு என்பவர் தலா 25 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணத்தை வாங்கி 10 ஆண்டுகள் ஆகியும், அதற்கான வட்டியோ, அசலோ எதுவும் திருப்பித்தரப்படவில்லை. இதுகுறித்து, பாலாஜிபாபுவிடம் கேட்ட போது, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இருவரும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்