கொட்டிய பேய் மழை.. கட்டுக்கடங்காத வெள்ளம்.. உடைந்து ஓடும் நெடுஞ்சாலை.. நீரில் மூழ்கிய தெருக்கள்

x

ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியா எல்லையில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது... வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்... பல கிராமங்கள் தனித்தீவாக மாறின... வீடுகள், கட்டடங்கள் உருக்குலைந்து போயின... நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்... ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியா இடையே ஒரு நெடுஞ்சாலை மற்றும் தண்டவாளம் துண்டிக்கப்பட்டது.. ஜார்ஜியாவில் உள்ள மார்னியூலி மற்றும் போல்னிசியில் தெருக்கள் நீரில் மூழ்கி வாகனங்கள் சிக்கித் தவித்தன... ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்...


Next Story

மேலும் செய்திகள்