டான்ஸ் ஆடுவதில் ஏற்பட்ட தகராறு... வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த கலவரம் - கடலூரில் பயங்கரம்

x

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும்

அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நள்ளிரவில் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதில் பாஸ்கர், நேதாஜி, மகாலட்சுமி உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 6 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடுவது தொடர்பாக எழுந்த தகராறு மோதலாக வெடித்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்