1000 ரூபாய் வாங்க போறீங்களா?... இதையெல்லாம் சரியா வச்சிக்கோங்க - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் குறித்த உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதில், விண்ணப்பங்கள் வரும்1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நான்கு தினங்களுக்குள் முழுமையாக விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நியாயவிலைக்கடைக்கும் தனித்தனியாக விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்ப விநியோகத்தை முடிக்க வேண்டும்.

500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 60 வீதமும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 120 வீதமும்,

1500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 180 வீதமும், நாளொன்றுக்கு 2000 குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும்,

நேரத்தை பொருத்தவரை காலை அல்லது மதியம் என்று பொதுவாக குறிப்பிடுவதை தவிர்த்து ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் நேரம் குறிப்பிடப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு டோக்கன் விநியோகம் செய்யும்போது அப்பகுதியில் இறப்பு, வீட்டில் ஆள் இல்லாதவர்கள்,

விண்ணப்ப படிவம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்பவர்கள் விவரங்களை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்