தடையில்லா சான்றிதழ் கேட்டு பட்டாசு கடைகள் விண்ணப்பம் - 465 கடைகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
தடையில்லா சான்றிதழ் கேட்டு பட்டாசு கடைகள் விண்ணப்பம் - 465 கடைகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதல் கோரிய 465 கடைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைத்து விற்பனை செய்வது வழக்கம். அதற்கு தீயணைப்பு துறையின்
தடையில்லா சான்றிதழும், மாவட்ட காவல்துறையின் தற்காலிக உரிமமும் விண்ணப்பித்து வாங்க வேண்டும். அதன்படி, தமிழகம் முழுவதும்
பட்டாசு கடைகளுக்காக தடையில்லா சான்றிதழ் கோரி தீயணைப்புத்துறையிடம் 6 ஆயிரத்து 667 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், முறையான பாதுகாப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 465 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நாகை
மாவட்டத்தில் 209 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 609 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும்
ஆயிரத்து 793 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை தெரிவித்துள்ளது.