பாஷா என நினைத்த மக்கள் சுயரூபத்தை காட்டிய ஆண்டனி

x

தென்காசி அருகே, பல லட்சம் மோசடிக்கு தூண்டிலாக, சில லட்சத்தில் நற்பணிகள் செய்து வந்த, போலி தொழில் அதிபர், காவல் துறையால் கைது செய்யப் பட்டார்.

குற்றாலம் அருகே உள்ள நன்னாகரம் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான் மீது, கோவில்பட்டியை சேர்ந்த பெருமாள்சாமி என்ற நபர் நாகூர்மீரான் மீது பரபரப்பு புகார் ஒன்றை குற்றாலம் காவல் நிலையத்தில் கொடுத்தார்.அதில், 3 கோடி கடன் வாங்கி தருவதாகவும், அதற்குரிய ஆவணங்களை தயார் செய்ய16 லட்சம் பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். இதேபோன்று, தேவகோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்,

தனக்கு 10 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி,10 லட்சம் ரூபாயை நாகூர் மீரான் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். விசாரணையில்,

அவர் தமிழக முழுவதும் உள்ள பல்வேறு நபர்களிடம் இது போன்ற மோசடியில் ஈடுபட்டதும், மோசடி செய்து கிடைத்த பணத்தில் சொற்ப காசுகளை செலவு செய்து விளம்பரம் தேடிக் கொண்டு அந்த விளம்பரத்தை வைத்து தொடர் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மோசடிகளில் உடந்தையாக நாகூர் மீரான் மனைவி விஜயலட்சுமி மற்றும் ஜெயப்பிரியா, மணிகண்டன், ரஹீம் உள்ளிட்ட 5பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்