சாலையில் இறங்கிய ஏஐடியுசி-வினர்... தமிழகம் முழுவதும் போராட்டம்... | AITUC
தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகங்கள் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தன்னாட்சி அதிகாரத்தை வாரியத்திற்கு வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
