பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு... திரும்பியதும் ஊசலாடும் தந்தையின் உயிர்... பாட்டி, அத்தைகள் துடிதுடித்து மரணம்

x

பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு... திரும்பியதும் ஊசலாடும் தந்தையின் உயிர்... பாட்டி, அத்தைகள் துடிதுடித்து மரணம்

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஏஜாஸ் என்பவரின் மனைவிக்கு சேலத்தில் குழந்தை பிறந்துள்ளது. அதையடுத்து, ஏஜாஸ் தனது மனைவி மற்றும் குழந்தையை

பார்ப்பதற்காக குடும்பத்துடன் காரில் சேலம் சென்றுள்ளார். குழந்தையை பார்த்துவிட்டு நேற்று இரவு குடும்பத்துடன் ஏஜாஸ் சென்னை திரும்பியுள்ளார். இன்று

அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த‌து. இந்த விபத்தில் காரில்

பயணம் செய்த ஏஜாசின் தாய் சமீம், தங்கை அம்ரின் மற்றும் சுபேதா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல்

அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த ஏஜாஸ் உள்ளிட்ட 2 பேரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி

வைத்தனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிர் இழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்