பண மதிப்பிழப்பு செய்து, 5 ஆண்டுக்கு பிறகு.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பண மதிப்பிழப்பு செய்து, 5 ஆண்டுக்கு பிறகு.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
500, 1000 ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்ததற்கு எதிரான மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய
உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்ற வாதம் அரசு
தரப்பில் முன்வைக்கப்பட்ட நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பின்பற்றிய வழிமுறைகள் சரியானதா...? என மனுதாரர்கள்
தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பணத்தை மதிப்பிழப்பு செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் கொண்டுவர
வேண்டும், ஆனால் 2016 ஆம் ஆண்டு அப்படி நடக்கவில்லை என மனுதாரர் தரப்பில் ப.சிதம்பரம் வாதாடினார். மனுதாரர்களின் வாதத்தை
ஏற்ற நீதிபதிகள், கொள்கை முடிவாக இருந்தாலும் அதன் வழிமுறைகளை விசாரிக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதுதொடர்பாக
விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை நவம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.