ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்த ஜெயக்குமார் | ADMK

x

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வேட்புமனு தாக்கல், வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திமுக சார்பில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, ரயில்களில் உள்ள மத்திய அரசின் விளம்பரங்களை நீக்குவது குறித்து கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசு வாகனங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்