ஆரோக்கியம் அருளும் ஆடிக்கிருத்திகை... முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

x

2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள், பால்காவடி, புஷ்ப காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்தனர். இன்று மாலை தங்கத்தேரில் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 3 மணி நேரம் காத்திருந்த முருகனை தரிசனம் செய்தனர். படிப்பாதை ,யானைப்பாதை ,மின் இழுவை ரயில் ரோப்கார் நிலையங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நான்காம் படை வீடான கும்பகோணம் சுவாமிமலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் சாமிநாதசாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில், ஆடி கிருத்தியை வழிபாடு களையட்டியது. சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்கு பிறகு முருகக் கடவுள் முத்துக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story

மேலும் செய்திகள்