"சும்மா எதுக்கெடுத்தாலும் லஞ்சமா?".. கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு - கதிகலங்கிய வி.ஏ.ஓ.

x

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே, கிராம நிர்வாக அலுவலர், அவரது உதவியாளரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர். சில்லாரஹள்ளி கிராம நிர்வாக அலுவலராக உள்ள பரமசிவம், அவரது உதவியாளர் ஜெயந்தி ஆகியோர் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்த பொதுமக்கள், விஏஓ, அவரது உதவியாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமம் முழுவதும் துண்டறிக்கை ஒட்டியுள்ளனர். மேலும், பரமசிவம், ஜெயந்தி இருவரையும் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என, ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்