வெள்ளப்பெருக்கு.. ஆபத்தை தடுக்க போலீசார் எடுத்த அதிரடி முடிவு |

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க வரும் மக்களை தடுக்கும் வகையில்...
x

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க வரும் மக்களை தடுக்கும் வகையில், குமாரபாளையம் பாலத்தில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 10ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் காவிரி ஆற்று வெள்ளப்பெருக்கை காண்பதற்காக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலுள்ள பாலத்தின் மீது பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாலத்தில் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்த போலீசார், பாலத்தின் வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்