"தனியார் கல்குவாரி உரிமையை ரத்து செய்க" - 4வது நாளாக தனி ஒருவராக போராடும் விவசாயி

x

"தனியார் கல்குவாரி உரிமையை ரத்து செய்க" - 4வது நாளாக தனி ஒருவராக போராடும் விவசாயி

திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரியும்,

முறைகேடாக அனுமதி வழங்கியது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக் கோரியும் விஜயகுமார் என்பவர் மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை மனு

அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது நிலத்தில் விஜயகுமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். தொடர்ந்து நான்காவது நாளாக போராடி

வரும் அவரிடம், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராடத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். இவருக்கு பல்வேறு விவசாய

சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதன் எதிரொலியாக, தனியார் கல்குவாரியில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்